/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு மூலிகை கண்காட்சி
/
தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு மூலிகை கண்காட்சி
தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு மூலிகை கண்காட்சி
தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு மூலிகை கண்காட்சி
ADDED : டிச 20, 2024 01:05 AM
தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு மூலிகை கண்காட்சி
சேலம், டிச. 20-
தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, இந்திய மருத்துவ மற்றும் ேஹாமியோபதி துறை சார்பில், இலவச சித்த மருத்துவ முகாம்
மற்றும் மூலிகை கண்காட்சி நடத்தப்பட்டது.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். முகாமில் சிறப்பு வர்மம், சுட்டிகை, யாக்கை, இலக்கணம், தொக்கணம், மணிக்கடை நுால் போன்ற சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டன, மேலும் மருந்துகள் வழங்கப்பட்டன.
இது குறித்து சித்த மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன் கூறுகையில், ''ஆங்கில மருத்துவத்தில் உடனடி தீர்வு காணப்பட்டாலும், அது நிரந்தர தீர்வாகாது. சித்தா, ேஹாமியோபதி மருத்துவத்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும். குறிப்பாக, பெண்களுக்கு ஆபரணங்கள் அணிவதன் அவசியத்தையும், அதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு வர்ம புள்ளிகள் துாண்டப்
படுகிறது. குறிப்பாக நெற்றிசுட்டி அணிவதால் மலச்சிக்கல் போக்கும், சுகபிரசவத்திற்கு உதவும், கம்மல் அணிவதால் மூளைக்கும், காதுகளுக்கும் ஆற்றலை தரும். மூக்குத்தி அணிவதால் மூக்கு தொடர்பான நோய்களை போக்கும். மோதிரம் கைவிரலுக்கு ஆற்றல் தரும், கொலுசு அணிவதால் கால்களுக்கு வலு தரும்,'' என்றார்.
ஒருவாரத்திற்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்படும் என, இன்காப்ஸ் நிறுவன இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்தார்.