/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டவுன் பஞ்சாயத்தை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
/
டவுன் பஞ்சாயத்தை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
டவுன் பஞ்சாயத்தை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
டவுன் பஞ்சாயத்தை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 30, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த, புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், இந்து முன்னணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் சுப்பிரமணியம், பா.ஜ., மாநில செயலர் சூர்யா, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் பேசினர்.
அதில் முத்துமலை முருகன் கோவிலை சுற்றுலாத்தலம் எனக்கூறி, ஏத்தாப்பூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், குறைந்த விலைக்கு ஏலம் விட்டு, கோடிக்கணக்கில் பக்தர்களிடம் விஞ்ஞான கொள்ளையடிக்கிறது. மேலும் மண் கொள்ளைக்கு வருவாய்த்துறை துணை போவதாக தெரிவித்து கோஷம் எழுப்பினர். நிர்வாகிகள், மக்கள் பங்கேற்றனர்.