/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெரியார் பல்கலையில் எச்.ஐ.வி., விழிப்புணர்வு
/
பெரியார் பல்கலையில் எச்.ஐ.வி., விழிப்புணர்வு
ADDED : செப் 24, 2025 02:01 AM
ஓமலுார் :ஓமலுார் அரசு மருத்துவமனை, சேலம் பெரியார் பல்கலை ரெட் ரிப்பன் கிளப், தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலியை நேற்று நடத்தின. பெரியார் பல்கலை முன், மனித சங்கிலியாக மாணவ, மாணவியர் நின்றனர்.
தொடர்ந்து பேரணியை பல்கலை பதிவாளர் ராஜ்(பொ) தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்கலை வளாகத்தில் மயிலாட்டம், கரகாட்டம், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க கிளஸ்டர் மேலாளர் தாமோதரன், கிளஸ்டர் அலுவலர் சந்திரசேகர், மருத்துவமனை ஐ.சி.டி.சி., ஆலோசகர் கவிதா, பல்கலை சார்பில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்
பங்கேற்றனர்.