/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி முன் வேன் டிரைவர்கள் இடையூறு கலெக்டருக்கு புகார் அனுப்பிய ஹெச்.எம்.,
/
பள்ளி முன் வேன் டிரைவர்கள் இடையூறு கலெக்டருக்கு புகார் அனுப்பிய ஹெச்.எம்.,
பள்ளி முன் வேன் டிரைவர்கள் இடையூறு கலெக்டருக்கு புகார் அனுப்பிய ஹெச்.எம்.,
பள்ளி முன் வேன் டிரைவர்கள் இடையூறு கலெக்டருக்கு புகார் அனுப்பிய ஹெச்.எம்.,
ADDED : நவ 19, 2025 03:38 AM
ஆத்துார், பள்ளி முன் வேன் டிரைவர்கள் வாகனங்களை நிறுத்தி, பள்ளம் சீரமைப்பு பணிக்கு இடையூறு செய்வதாக, கலெக்டருக்கு, தலைமை ஆசிரியர் புகார் அனுப்பியுள்ளார்.
ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிரதான நுழைவாயில் முன் பள்ளத்தை சீரமைக்க, தன்னார்வ அமைப்பினர், கிராவல் மண் வழங்கினர். நேற்று காலை, 11:00 மணிக்கு, அந்த மண்ணை, நுழைவு பாதையின் கிழக்குப்புறமாக கொட்டினர். அப்போது அதே பகுதியில் சரக்கு வேன், மினி லாரி நிறுத்தியிருந்த உரிமையாளர்கள், டிரைவர்கள், பணியை தடுத்து வாக்குவாதம் செய்தனர்.
தலைமை ஆசிரியர் சந்திரசேகர் உள்ளிட்ட ஆசிரியர்கள், 'வாகனங்களை தள்ளி நிறுத்திக்கொள்ளுங்கள்' என்றனர். அதற்கு டிரைவர்கள், 'நெடுஞ்சாலையில் தான் நிறுத்துகிறோம். இங்கு மண் கொட்ட வேண்டாம்' எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ பரவி வருகிறது.இதையடுத்து தலைமை ஆசிரியர் சந்திரசேகர் நேற்று, சேலம் கலெக்டர், ஆத்துார் ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி., நெடுஞ்சாலைத்துறை அலுவலர், டவுன் போலீஸ் உள்ளிட்டோருக்கு புகார் மனு அளித்துள்ளார். அதில், 'பள்ளி நுழைவு பகுதியொட்டி மினி லாரி, வேன்களை நிரந்தரமாக நிறுத்தி வரும் டிரைவர்கள், நாகரீகமற்ற முறையில் விவாதம் செய்து, மண் கொட்டி சமன்படுத்தும் பணியை தடுத்து மிரட்டல் விடுத்தனர். நுழைவு பகுதியை சீரமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

