/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி: சீடர்களின் பாதம் கழுவிய ஆயர்
/
பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி: சீடர்களின் பாதம் கழுவிய ஆயர்
பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி: சீடர்களின் பாதம் கழுவிய ஆயர்
பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி: சீடர்களின் பாதம் கழுவிய ஆயர்
ADDED : ஏப் 18, 2025 02:17 AM
சேலம்:
பெரிய வியாழன் தினத்தையொட்டி, புனித மிக்கெல் ஆலயத்தில் சீடர்களின் பாதங்களை மறைமாவட்ட ஆயர் அருட்செல்வம் ராயப்பன் கழுவி சிறப்பு திருப்பலி நடத்தினார்.
சேலம், அழகாபுரம் முதன்மை வானதுாதர் புனித மிக்கெல் ஆலயத்தில், தவக்காலம் நிறைவாக கடந்த ஏப்.,13ல் குருத்தோலை ஞாயிறு ஆலய பங்குத்தந்தை எட்வர்ட் ராஜன் தலைமையில் ஊர்வலம் நடத்தப்பட்டது.
தொடர்ச்சியாக பெரிய வியாழன் தினமான நேற்று, சேலம் மறைமாவட்ட ஆயர் அருட்செல்வம் ராயப்பன் தலைமையில், 'இரவு உணவு' சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முதல் நாள் இரவு உணவின் போது தன், 12 சீடர்களின் பாதங்களை கழுவி சுத்தம் செய்து அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள் என தெரிவித்தார்.
இதை நினைவுகூறும் வகையில், ஆலயத்தை சேர்ந்த, 12 சீடர்களின் பாதங்களை மறைமாவட்ட ஆயர் அருட்செல்வம் ராயப்பன் தண்ணீரால் கழுவி துடைத்து சுத்தம் செய்து முத்தமிட்டார். இரவு 8:00 மணி முதல் 12:00 மணி வரை பங்கு பணியாளர்கள், இளையோர், ஜெபக்குழு, இசைக்குழுக்களின் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியான இன்று காலை, 7:00 மணிக்கு சிலுவைப்பாதை ஊர்வலம் நடக்கிறது.
மாலை, 3:00 மணிக்கு இயேசுவின் ஏழு வார்த்தைகள், மாலை, 6:00 மணிக்கு திருச்சிலுவை ஆராதனை மற்றும் நற்கருணை வழிபாடு நடக்கிறது.
இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் சண்டே வரும், 20ல் ஆலய பங்குத்தந்தை எட்வர்ட் ராஜன் தலைமையில் 'பாஸ்கா' திருப்பலி நடக்க உள்ளது.
புனிதவெள்ளி, ஈஸ்டர் விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை எட்வர்ட் ராஜன், அருட்தந்தை ஸ்டான்லி சேவியர், திருத்தொண்டர் கிேஷார் உள்ளிட்ட அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர் செய்து வருகின்றனர்.
லாரியை கடத்திய 4 பேர் கைது
இடைப்பாடி:
ஓமலுார் தாலுகா, குறுக்குப்பட்டியை சேர்ந்தவர் அபிமன்னன், 40. இவர் டாரஸ் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது லாரியில் ரவி என்பவர் டிரைவராகவும், கோவிந்தன் கிளீனராகவும் உள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து, கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம், திருச்சூருக்கு லாரி சென்று கொண்டு இருந்தது. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு கொங்கணாபுரம் அருகே வெட்டுக்காடு ரிங்ரோடு பகுதியில், லாரி இன்ஜின் ஓடிக்கொண்டு இருந்தபோது, லாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் இயற்கை உபாதைக்கு சென்றுள்ளார். கிளீனர் கோவிந்தன் இருந்துள்ளார். அப்போது காரில் வந்த நான்கு பேர் லாரியை கடத்தி சென்று, சேலம் கொண்டலாம்பட்டியில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இது குறித்து கொங்கணாபுரம் போலீசார் விசாரித்து, லாரியை கடத்திய சேலம், சோளம்பள்ளத்தை சேர்ந்த செல்வராஜ், 50, சூரமங்கலம் அழகுமுருகன், 37, கே.ஆர்.தோப்பூர் தனபால், 33, சேலம் சித்தனுாரை சேர்ந்த கோபிநாத், 44, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

