/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கருணாநிதி படம் முன் 'கருணைக்கொலை மனு'கவுரவ விரிவுரையாளர்கள் நுாதன ஆர்ப்பாட்டம்

ADDED : ஏப் 17, 2025 01:26 AM
ஆத்துார்:கருணைக்கொலை மனுவை, முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் முன் வைத்து கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் கல்லுாரி - 164, கல்வியியல் - 7 என, 171 கல்லுாரிகள் உள்ளன. அதில், 7,324 கவுரவ விரிவுரையாளர்கள், 25 ஆண்டுக்கு மேலாக பணிபுரிகின்றனர். அவர்கள், பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, காலமுறை ஊதியம் உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 7 முதல், 10 சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த, 10ல், 'கோரிக்கையை நிறைவேற்றாத நிலையில், கருணைக்கொலை செய்துவிடுங்கள்' என, தமிழக அரசுக்கு, கவுரவ விரிவுரையாளர்கள் ஆட்சி மன்ற குழு சார்பில் மனு அனுப்பினர்.
இந்நிலையில் நேற்று, சேலம் மாவட்டம் ஆத்துார், வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், மறைந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்துக்கு முன், கருணைக்கொலை மனுவை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து கவுரவ விரிவுரையாளர்கள் கூறுகையில், 'கொத்தடிமை போன்று பணிபுரிகிறோம். பணி நிரந்தரம் செய்வதாக, தி.மு.க., 2021 சட்டசபை தேர்தலின்போது, வாக்குறுதி அளித்தபோதும், ஆட்சிக்கு வந்து, 4 ஆண்டாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பையும் நிறைவேற்றவில்லை' என்றனர்.