ADDED : நவ 13, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு, ஏற்காட்டில் உள்ள, 100க்கும் மேற்பட்ட தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு, ஓட்டல் உரிமையாளர் சங்கம் செயல்படுகிறது. அதன் நிர்வாகிகள், ஊழியர்கள் இணைந்து, 'கிளீன் அண்ட் கிரீன் ஏற்காடு' பெயரில் நேற்று, அண்ணா, பூங்கா ஏரிக்கள், பூங்கா சாலை, ஒண்டிக்கடை ரவுண்டானா உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் சாலை ஓரங்களில் கிடக்கும் குப்பை, பிளாஸ்டிக் கழிவை அகற்றினர்.
இப்பணியில், ஏற்காடு போலீசார், தாசில்தார், பி.டி.ஓ., உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தங்கும் விடுதி ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து சுற்றுலா பயணியர் அதிகம் கூடும், 5 இடங்களில் குப்பை தொட்டிகளை வைத்தனர். சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டர் உமா நந்தினி உள்பட பலர் பங்கேற்றனர்.

