/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதலாளி வீட்டில் திருட்டு தொழிலாளிக்கு 'காப்பு'
/
முதலாளி வீட்டில் திருட்டு தொழிலாளிக்கு 'காப்பு'
ADDED : நவ 13, 2025 01:42 AM
இடைப்பாடி, மகுடஞ்சாவடி அருகே ஏகாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். அதே பகுதியில் வீட்டை ஒட்டி விசைத்தறி கூடம் நடத்துகிறார். அங்கு, இரு மாதங்களுக்கு முன், கொங்கணாபுரம் அருகே, வி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சக்தி, 38, அவரது மனைவி ரேவதி ஆகியோர் பணிக்கு சேர்ந்தனர். இவர்கள் பணி நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில், கணேசன்
வீட்டுக்கு வந்து செல்வர்.
கடந்த, 10ல் தம்பதியர், வேலை முடிந்து கணேசன் வீட்டுக்கு வந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு புறப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை, கணேசனின் மனைவி தேவகி, சுபநிகழ்ச்சிக்கு செல்ல பீரோவில் இருந்த, 5 பவுன் இரட்டை வட தங்க சங்கிலியை அணிய, பீரோவை திறந்தபோது காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர், மகுடஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தார். அதில், ' என் விசைத்தறி கூடத்தில் பணிபுரியும் சக்தி மீது சந்தேகம் உள்ளது' என தெரிவித்திருந்தார். போலீசார், சக்தியை அழைத்து விசாரித்தபோது, 5 பவுன் சங்கிலி திருடியதை ஒப்புக்கொண்டார். சங்கிலியை மீட்ட போலீசார், சக்தியை கைது செய்தனர்.

