/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆபர்' பெயரில் விலை குறைப்பு ஓட்டல் உரிமையாளர்கள் அலறல்
/
ஆபர்' பெயரில் விலை குறைப்பு ஓட்டல் உரிமையாளர்கள் அலறல்
ஆபர்' பெயரில் விலை குறைப்பு ஓட்டல் உரிமையாளர்கள் அலறல்
ஆபர்' பெயரில் விலை குறைப்பு ஓட்டல் உரிமையாளர்கள் அலறல்
ADDED : ஜூலை 03, 2025 02:01 AM
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான, ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்டவை, 'ஆபர்' என்ற பெயரில், உணவு விலையை குறைப்பதால்,
கட்டுப்படியாகாத ஓட்டல் உரிமையாளர்
கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
உணவு டெலிவரி நிறுவனமான, 'ஸ்விக்கி', தங்களது, 'ஆப்'பை பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்வதற்கான பிளாட்பார்ம் கட்டணத்தை, கடந்த, 2023 ஏப்.,ல், 2 ரூபாய் உயர்த்தி அறிவித்தது. இதேபோல், 2023 ஆக.,ல் ஜொமாட்டோ நிறுவனமும், இந்த கட்டணத்தை செயல்படுத்த தொடங்கியது. பின், கட்டணம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு ஆர்டருக்கு, 20 சதவீதம் அதாவது, 6 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும், பெரு நகரங்களில், 'பீக் ஹவர்' நேரங்களில், ஒரு ஆர்டருக்கு பிளாட்பார்ம் கட்டணமாக ஜொமாட்டோ, 9 ரூபாயும், ஸ்விக்கி, 10 ரூபாயும் வசூலிக்கிறது. மேலும், டெலிவரி கட்டணம், ஜி.எஸ்.டி., கட்டணம், கையாளுதல் கட்டணம் ஆகியவற்றுடன் சேரும்போது பெருநகரம், சிறு நகரம் என, ஒவ்வொரு நகரத்திற்கும் கட்டணம் மாறுபடுகிறது. இதன் மூலம், இந்த நிறுவனங்களுக்கு கணிசமாக வருவாய் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த நிறுவனங்கள் திடீரென ஓட்டல் உரிமையாளர்களுக்கே தெரிவிக்காமல், 'ஆபர்' என்ற பெயரில் விலையை குறைத்து, தங்களது ஆப்களில் விளம்பரப்படுத்தி உணவு வகைகளை விற்பனை செய்து வருகின்றன. சில நேரம், குறிப்பிட்ட நேரத்துக்குள் உணவு சப்ளை செய்வதில்லை. அதனால், வாடிக்கையாளர்கள் ஆர்டரை கேன்சல் செய்கின்றனர். அவ்வாறு கேன்சல் செய்யப்படும் ஆர்டர்கள், ஓட்டல் உரிமையாளர்களின் தலையில் கட்டப்படுகிறது. இதுபோன்று, உணவு டெலிவரியில் வெளிப்படை தன்மை இல்லாமல் நடந்து கொள்வதால், ஓட்டல் உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.