/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டல்கள் மூடல்; 'பேச்சுலர்ஸ்' திண்டாட்டம்
/
ஓட்டல்கள் மூடல்; 'பேச்சுலர்ஸ்' திண்டாட்டம்
ADDED : ஜன 16, 2025 06:55 AM
சேலம்: பொங்கல் பண்டிகையின், 2ம் நாளான நேற்று மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதனால் சேலத்தில் உள்ள மெஸ், ஓட்டல், நடைபாதை கடைகள் உள்ளிட்ட உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் விடுமுறை கிடைக்காமல் வெளியூரில் இருந்து வந்து பணிபுரிந்த, 'பேச்சுலர்ஸ்' அவதிக்குள்ளாகினர்.
எப்போதும் உணவு கிடைக்கும், புது பஸ் ஸ்டாண்டில் கூட நேற்று பயணியர் எண்ணிக்கை சரிவால், பெரும்பாலான கடைகள் இயங்கவில்லை. மேலும் திருவள்ளுவர் தினம் என்பதால் இறைச்சி கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டதால், உணவு கிடைக்காமல் பலரும் திண்டாட்டத்துக்கு ஆளாகினர். தட்டுவடை செட், பானிபூரி உள்ளிட்ட ஸ்னாக்ஸ், டீக்கடைகள் கூட பெரும்பாலும் செயல்படவில்லை. ஆங்காங்கே திறந்திருந்த ஓரிரண்டு கடைகளிலும், கூட்டம் அலைமோதியது.

