/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் திருட்டு
ADDED : அக் 28, 2025 02:01 AM
சேலம், சேலம், அம்மாபேட்டை அடுத்த மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சங்கர். 50 இவர் குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி, 46. இவர்களது மகள் சுவாதி, 20, சென்னையில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார்.
வளர்மதி தனியாக வசித்து வருகிறார். இவர் அடிக்கடி மகளை பார்க்க, சென்னை சென்று விடுவார். இரண்டு நாட்களுக்கு முன்பு, வளர்மதி வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். இந்நிலையில், நேற்று மாலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை, அக்கம் பக்கத்தினர் வளர்மதிக்கு தெரிவித்தனர்.
இது குறித்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார் சென்று பார்த்த போது, பீரோவை உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பீரோவில் 10 பவுன் நகை, 15 ஆயிரம் ரூபாய் இருந்ததாகவும், மற்ற பொருட்கள் குறித்து நேரில் வந்து பார்த்த பின் தான் கூற முடியும் என, வளர்மதி கூறியுள்ளார்.

