/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாவியை எடுத்து வீட்டை திறந்து 3 பவுன் நகை, வெள்ளி திருட்டு
/
சாவியை எடுத்து வீட்டை திறந்து 3 பவுன் நகை, வெள்ளி திருட்டு
சாவியை எடுத்து வீட்டை திறந்து 3 பவுன் நகை, வெள்ளி திருட்டு
சாவியை எடுத்து வீட்டை திறந்து 3 பவுன் நகை, வெள்ளி திருட்டு
ADDED : ஜூலை 05, 2025 01:09 AM
சேலம், சேலம், கோட்டை, ராம் நகர், குண்டு போடும் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சுபாஷினி, 33. இவர், நேற்று முன்தினம் காலை, வீட்டை பூட்டிவிட்டு, சாவியை அருகே மறைவான இடத்தில் வைத்துச்சென்றார்.
மாலை வீடு திரும்பியபோது, கதவு திறந்து கிடந்ததால் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, 3 பவுன் தங்க சங்கிலி, 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் புகார்படி, சேலம் டவுன் போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த, 1ல், சேலம், கோட்டையில் உள்ள ஒரு வீட்டில், 9 பவுன் நகைகள், 750 கிராம் வெள்ளி திருடுபோன நிலையில், இரு நாட்கள் கழித்து, அதே பகுதியில் மற்றொரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.