sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கர்ப்ப கால சர்க்கரை குறைபாட்டை தவிர்ப்பது எப்படி?

/

கர்ப்ப கால சர்க்கரை குறைபாட்டை தவிர்ப்பது எப்படி?

கர்ப்ப கால சர்க்கரை குறைபாட்டை தவிர்ப்பது எப்படி?

கர்ப்ப கால சர்க்கரை குறைபாட்டை தவிர்ப்பது எப்படி?


ADDED : அக் 11, 2024 01:04 AM

Google News

ADDED : அக் 11, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்யாண் சில்க்ஸின் டபுள் தீபாவளி!

இந்த தீபாவளியை உங்கள் மனம் நிறைய கொண்டாட, விதவிதமான ஆடை

வகைகள், அசத்தலான காம்போ ஆபரில், கல்யாண் சில்க்ஸ் டபுள் தீபாவளி

ஆபராக வழங்குகிறது. ஒவ்வொரு பர்சேஸ்க்கும் வீட்டு உபயோக பொருட்கள்,

நிச்சய பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

டிரெண்டிங்கில் உள்ள குவாலிட்டி பேஷன் ஆடைகளை, மிக குறைந்த விலையில் காம்போ ஆபர்களில் பர்சேஸ் செய்ய, இந்த டபுள் தீபாவளி ஷாப்பிங் மட்டுமே சரியானது. இந்த சலுகை ஈரோடு மற்றும் சேலம் மாநகர மக்களை மிகவும் கவர்ந்திழுக்கும் வண்ணமாக உள்ளது. இந்த காம்போ ஆபர்கள் இல்லாமலும் ஆடை வகைகளை பர்சேஸ் செய்ய முடியும் என்பது தனிச் சிறப்பு. ஹை-குவாலிட்டி தீபாவளி வரவு, அனைத்திலும் நியூ டிரெண்ட், லேட்டஸ்ட் அப்டேட் என்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் புத்தம் புது குவாலிட்டி ரகங்கள், விற்பனைக்கு

குவித்து வைக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் பிராண்டடு பட்டான சவுகந்திகா திருமணப்புடவை, காஞ்சிபுரம் திருமண புடவை, பனாரஸ் பட்டு, மைசூர் பட்டு புடவை, டிசைனர் புடவை, ஷிபான் சாரீஸ், காஹ்ரா சோலி, சுடிதார் வகைகள், மேற்கத்திய ஆடை வகைகள் என்று பெண்களுக்கு பல்வேறு வித ஆடை ரகங்கள் இங்கு அணிவகுத்துள்ளன. ஆண்களுக்கு பார்மல், கேஷுவல், எத்னிக், இண்டோவெஸ்டர்ன் வியர் மற்றும் பார்மல் ஷர்ட்-சூட்ஸ், வேஷ்டி உள்பட ஏராளமான ஆடைகள் கிடைக்கின்றன. மேலும் குழந்தைகளுக்கான ஆடைகள், சிறுவர் சிறுமியருக்கான ஆடைகள், அழகு சாதனப்

பொருட்கள் அனைத்தும், ஒரே இடத்தில் கிடைக்கின்றன.

கர்ப்ப கால சர்க்கரை குறைபாட்டை தவிர்ப்பது எப்படி?

ஈரோடு கே.எம்.சி.எச்., ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நாளமில்லா சுரப்பியல் சிறப்பு மருத்துவர் அனிதா சோமசுந்தரம், சர்க்கரை நோய் (நீரிழிவு) குறித்து கூறியதாவது:சர்க்கரை நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது ஏற்படும் ஒரு நாள்பட்ட மருத்துவ நிலை ஆகும். இது எல்லா வயதினரையும் பாதிக்கிறது. கடந்த, 2023ல் தி லான்சட் மருத்துவ ஆய்விதழ், நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பிகள் பற்றி வெளியிட்ட ஆய்வில், 10 கோடி மக்களுக்கும் அதிகமானோர், இந்தியாவில் நீரிழிவு குறைபாடுடன் வாழ்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 13.6 கோடி மக்கள் சர்க்கரை நோயாளிகளாக மாறக்கூடிய அபாய நிலையில் உள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு நோய் உள்ளன.

டைப் 1 வகை, குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் காணப்படுகிறது. இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் தேவைப்படுகிறது. டைப் 2 குறைபாடு பொதுவான ஒன்றாகும். இந்தக்குறைபாடு பாதிக்கப்பட்ட நபர்களிடம், 90 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. கர்ப்ப கால சர்க்கரை குறைபாடு, கர்ப்ப காலத்தில் கண்டறியப்படும் நீரிழிவு குறைபாடாகும். இந்தியாவில் இந்த வகை நீரிழிவு ஆண்டுக்கு, 50 லட்சம் பெண்களை பாதிக்கிறது. இது பொதுவாக பிரசவத்துக்கு பிறகு சரியாகிவிடும். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பிற்காலத்தில் டைப் 2 வகை நீரிழிவு குறைபாட்டால், 50,- 60 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக ஆரம்ப காலத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பது பலருக்கு தெரியாது. இதை கண்டறிய உணவுக்கு முன், உணவுக்கு பின் சர்க்கரை நோய் கண்டறியும் பரிசோதனையை, எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். ஓரல் குளுக்கோஸ் டெலிரென்ஸ் டெஸ்ட், பொதுவாக கர்ப்ப கால நீரிழிவு நோயை கண்டறியும் பரிசோதனையாகும். இது கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் சோதனை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சோதனையை வீட்டிலேயே செய்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை அவ்வப்போது கண்காணித்து வரவேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொழில் தொடங்க ரூ.10 லட்சம்

கடன் வேண்டுமா?

பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் தொழில் தொடங்க, 35 சதவீத மானியத்துடன் கூடிய, 10 லட்சம் ரூபாய் கடன் உங்களுக்கு காத்திருக்கிறது.

தகுதிகள்: 18 வயதுக்கு மேல் உள்ள தனி நபர் அனைவருக்கும் வாய்ப்புள்ளது. கல்வி தகுதியே தேவையில்லை. வருமான வரம்பும் கிடையாது. புதிதாக குறு நிறுவனங்கள், விரிவாக்கம் செய்யும் உணவு சார்ந்த உற்பத்தி, சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். தனிநபர், குறு நிறுவனங்கள், சுயஉதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் தொழில் தொடங்க தாராளமாக முன்வரலாம்.

வாய்ப்புள்ள தொழில்கள்: மரச்செக்கு எண்ணெய், அரிசிமாவு மற்றும் மிளகாய் அரவைமில், பேக்கரி, இட்லி, தோசை மாவு மற்றும் பொடி தயாரித்தல்; அப்பளம், ஊறுகாய், வடகம், வத்தல் தயாரிப்பு, சிறுதானிய உணவுகள்; அரிசி பொரி, சோள பொரி, கால்நடை - கோழி தீவனம் தயாரித்தல். திட்ட மதிப்பில், 35 சதவீத மூலதன மானியம் உண்டு. அதிகபட்சம், 10 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். வங்கி மூலம், 90 சதவீத கடன், 10 சதவீத தொ கை, பயனாளிகள் பங்களிப்பாக இருக்க வேண்டும். கடன்பெற ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, போட்டோ, விலைப்பட்டியல் அவசியம் தேவை. www.pmfme.mofpi.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விபரம் பெற, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சேலம் மாவட்டம் என்ற முகவரியில் அணுகலாம். 0427 - 2447878, 2448505 என்ற எண்களில் பேசலாம். அத்துடன் அனைத்து உதவிகளும் ஒருசேர பெற, மாவட்ட வள அலுவலரை தொடர்பு

கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us