/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்
ADDED : மார் 13, 2024 07:24 AM
இடைப்பாடி : தமிழகத்தில் அதிகளவில் போதை பொருட்கள் உள்ளதை கட்டுப்படுத்த தவறிய, தி.மு.க., அரசை கண்டித்தும், முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும், அ.தி.மு.க.,வினர் தமிழகம் முழுதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
அதன்படி கொங்கணாபுரத்தில் அ.தி.மு.க.,வினர், போராட்டம் நடத்தினர். ஒன்றிய குழு தலைவர் மணி தலைமை வகித்தார். அதில் ஒன்றிய செயலர் ராஜேந்திரன், கொங்கணாபுரம் பேரூர் செயலர் பழனிசாமி, ராஜா, கூட்டுறவு சங்க முன்னாள் துணை தலைவர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் நகர செயலர் முருகன் தலைமையில் நடந்த போராட்டத்தில், நகராட்சி முன்னாள் தலைவர் கதிரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

