ADDED : டிச 11, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி : கெங்கவல்லி அருகே கூடமலையில், சர்வதேச மனித உரிமை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின், மாவட்ட அமைப்பாளர் ஜெகதாம்பாள் தலைமை வகித்தார்.
இதில் அனைவருக்கும் கல்வி; அடிப்படை உரிமைகள் கிடைத்தல்; பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்; பெண் குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கூட்டமைப்பு வட்டார தலைவர்கள் பழனியம்மாள், பச்சையம்மாள், கோமதி, ரேவதி, சின்னம்மாள், ஜோதி, கவிதா உள்பட பலர் பங்கேற்றனர்.

