/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சிக்கன் கிரேவி'யில் மனித பல்? ஓட்டல் தற்காலிக மூடல்
/
'சிக்கன் கிரேவி'யில் மனித பல்? ஓட்டல் தற்காலிக மூடல்
'சிக்கன் கிரேவி'யில் மனித பல்? ஓட்டல் தற்காலிக மூடல்
'சிக்கன் கிரேவி'யில் மனித பல்? ஓட்டல் தற்காலிக மூடல்
ADDED : அக் 26, 2024 08:04 AM
சேலம்,: 'சிக்கன் கிரேவி'யில் மனித பல் கிடந்ததாக எழுந்த புகாரால், ஓட்டல் தற்காலிகமாக மூடப்பட்டது.
சேலம், கன்னங்குறிச்சி, பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன், 35. இவர் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலு-வலகத்தில் அளித்த புகார் மனு:
நேற்று மாலை, 4:30 மணிக்கு, 5 ரோடு அருகே உள்ள அசோகா ஓட்டலுக்கு சென்று, இரு பரோட்டா, சிக்கன் கிரேவி வாங்-கினேன். அதில் மனித பல் கிடந்தது. இதுகுறித்து கேட்டபோது அவர்கள் மன்னிப்பு கேட்டனர். பின் அந்த சிக்கன் கிரேவியை கீழே ஊற்ற அறிவுறுத்தினேன். அவர்கள் ஊற்றாமல் மற்றவர்க-ளுக்கு பரிமாறினர். இதுகுறித்து போலீஸ், உணவு பாதுகாப்பு அதி-காரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். இப்படி அஜாக்கிரதையாக கடை நடத்தும்
உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதையடுத்து அங்கு உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து, உணவு மாதிரிகளை பகுப்பாய்வுக்கு எடுத்தனர். தொடர்ந்து தற்காலிகமாக ஓட்டலை மூட உத்தரவிட்டனர். ஓட்டல் உரிமையாளர் ராமசுப்புவுக்கு, விளக்கம்
கேட்டு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.
''பகுப்பாய்வு முடிவில் அடுத்த கட்ட விசாரணை நடத்தி நடவ-டிக்கை எடுக்கப்படும்,'' என, மாவட்ட உணவு பாதுகாப்பு நிய-மன அலுவலர் கதிரவன் தெரிவித்தார்.