/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
70 ஆண்டாக இணைந்து வாழ்ந்த மனைவி இறந்த சோகத்தில் கணவர் உயிரும் பிரிந்தது

ADDED : டிச 30, 2024 02:40 AM
வீரபாண்டி: சேலம், வீரபாண்டி முன்சீப் தோட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., பெரியசாமி, 94. வீரபாண்டி ஊராட்சி முன்னாள் தலை-வரும் ஆவார். இவரது மனைவி ஜெகதாம்பாள், 87. இவர்க-ளுக்கு திருமணமாகி, 70 ஆண்டுகளாகிறது.
இவர்களுக்கு மதிவாணன், 62, திரவியம், 60, என இரு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விவசாயம் செய்கின்றனர். மகன்கள் வழியில், 3 பேரன், பேத்திகள், 5 கொள்ளு பேரன் பேத்திகள் உள்ளனர்.வயது முதிர்வால், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு ஜெக-தாம்பாள் இறந்தார். அவரை அடக்கம் செய்யும் பணியில், மகன்கள், உறவினர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், 70 ஆண்டுக-ளாக இணைந்து வாழ்ந்த மனைவியின் இறப்பை தாங்க முடி-யாமல், சோகத்தில் இருந்த பெரியசாமி, நேற்று காலை, 7:00 மணிக்கு உயிரிழந்தார்.
தம்பதியர், இறப்பிலும் பிரியாமல் ஒன்றாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.