/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உல்லாசமாக இருந்த போது மனைவி இறந்ததாக நாடகம் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து கழுத்தை நெரித்து கொன்ற கணவன் கைது
/
உல்லாசமாக இருந்த போது மனைவி இறந்ததாக நாடகம் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து கழுத்தை நெரித்து கொன்ற கணவன் கைது
உல்லாசமாக இருந்த போது மனைவி இறந்ததாக நாடகம் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து கழுத்தை நெரித்து கொன்ற கணவன் கைது
உல்லாசமாக இருந்த போது மனைவி இறந்ததாக நாடகம் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து கழுத்தை நெரித்து கொன்ற கணவன் கைது
ADDED : மே 03, 2025 12:23 AM

ஒசூர்:ஓசூரில், மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, உல்லாசமாக இருந்த போது இறந்ததாக நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், மனைவியை நிர்வாணமாக்கி, கை, கால்களை கட்டி வைத்து, செக்ஸ் டார்ச்சர் கொடுத்து, கழுத்தை நெரித்து அவர் கொலை செய்தது தெரியவந்தது.
ராணிபேட்டை மாவட்டம், வாலாஜா அருகே தகரகுப்பத்தை சேர்ந்தவர் சசிகலா, 33. இவருக்கும், வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே போடிநத்தம் பகுதியை சேர்ந்த பாஸ்கர், 34, என்பவருக்கும், பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டு காதலமானது.
கடந்த, 2018 மார்ச் 4ம் தேதி இருவரும் பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, 5 வயதில் ஆண், ஒன்றரை வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஓசூர், ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் பகுதியில் வசித்தனர். ஓசூர், காமராஜர் காலனி, சீதாராம்மேடு, ஜூஜூவாடி, ராஜேஸ்வரி லே அவுட்டில் ஜிம் நடத்தி வந்தனர். காமராஜ் காலனியில் உள்ள பெண்களுக்கான பிரத்யேக ஜிம்மை சசிகலா கவனித்தார்.
ஆறு மாதங்களுக்கு முன், அரசு பள்ளி ஆசிரியையாக உள்ள பெண் ஒருவருக்கும், பாஸ்கருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. ஓசூர், அலசநத்தம் பகுதியில் கள்ளக்காதலிக்கு வீடு எடுத்து கொடுத்து, பாஸ்கர் அடிக்கடி அங்கு சென்று வந்தார்.
அப்பெண் ஏற்கனவே திருமணமாகி, கணவரை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையறிந்த சசிகலா, தன் கணவரிடம் கேள்வி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏப்., 30 இரவு, 11:00 மணிக்கு தன் மனைவியுடன் தனிமையில் இருந்த போது, திடீரென மனைவி மூக்கில் இருந்து ரத்தம் வந்து மயங்கியதாக கூறி, ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு பாஸ்கர் கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே சசிகலா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
சந்தேகத்தின் அடிப்படையில் பாஸ்கரிடம், ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர். தான் மனைவியுடன் உல்லாசமாக இருந்த போது, எதிர்பாராதவிதமாக அவர் இறந்து விட்டதாக கூறி நாடகமாடினார்.
ஓசூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சசிகலா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பாஸ்கரிடம் நேற்று போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக பாஸ்கர் ஒப்புக்கொண்டார். அவரை சிப்காட் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
பாஸ்கருக்கு திருமணத்திற்கு முன் கடன் இருந்ததால், சசிகலாவின் தந்தை அருள், 15 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். அதன் பின், பெங்களூருவில் உள்ள சொத்தை விற்று, 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அதனால் தான் ஒரு ஜிம் மட்டுமே வைத்திருந்த பாஸ்கர், பணம் கிடைத்த பின், மேலும் மூன்று ஜிம்களை திறந்தார்.
பாஸ்கருக்கு கள்ளக்காதலி இருப்பதை சசிகலா அறிந்ததால், அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டது. ஏப்., 30ம் தேதி இரவு இருவரும் படுக்கையறையில் தனிமையில் இருந்தனர். அப்போது, சசிகலாவை நிர்வாணமாக்கி, கை, கால்களை கட்டி வைத்து, வாயில் துணியை வைத்து அழுத்தி, செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பாஸ்கர், ஒரு கட்டத்தில் பின்புறமாக இருந்து துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின், மனைவிக்கு உடைகளை அவரே அணிவித்து, உல்லாசமாக இருந்த போது இயற்கையாக உயிரிழந்தது போல் நாடகமாடியுள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.