/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மனைவி கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற கணவர் சிக்கினார்
/
மனைவி கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற கணவர் சிக்கினார்
மனைவி கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற கணவர் சிக்கினார்
மனைவி கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற கணவர் சிக்கினார்
ADDED : ஜூலை 13, 2025 01:32 AM
ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை அருகே மனைவி நடத்தையில் சந்தேகத்தால், அவரது கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற கணவரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்து ஏலகிரி பஞ்., உட்பட்ட பொன்னகார வட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 34, லாரி டிரைவர். இவர் மனைவி பவித்ரா, 27. ராஜேஷ் மது பழக்கத்திற்கு அடிமையானவர். மனைவி நடத்தையில் சந்தேகத்தால் அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மது போதையில் வீட்டுக்கு வந்த ராஜேஷ், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார். பவித்ராவின் அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு, திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஜோலார்பேட்டை போலீசார், ராஜேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.