/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மகனுக்கு சூடு வைத்து கொடுமை மனைவி செயலால் கணவன் அதிர்ச்சி
/
மகனுக்கு சூடு வைத்து கொடுமை மனைவி செயலால் கணவன் அதிர்ச்சி
மகனுக்கு சூடு வைத்து கொடுமை மனைவி செயலால் கணவன் அதிர்ச்சி
மகனுக்கு சூடு வைத்து கொடுமை மனைவி செயலால் கணவன் அதிர்ச்சி
ADDED : ஜன 14, 2025 02:56 AM
சேலம்: சேலம் மாவட்டம், ஆத்துார் காந்திநகரை சேர்ந்தவர் ராஜீவ், 35; இவரது மனைவி சவுமியா, 28; தம்பதிக்கு நான்கு வயதில் மகன் உள்ளார். கணவனுடன் ஏற்பட்ட தகராறால் ஓராண்டுக்கு முன், ஆத்துாரில் உள்ள தாய் வீட்டுக்கு, சவுமியா மகனுடன் சென்று-விட்டார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், ராஜீவ் ஆட்கொ-ணர்வு மனு தாக்கல் செய்தார். தன் மகன் பிறவியிலேயே, இரு கைகளில் விரல்கள் ஒட்டியபடி பிறந்தார். எனவே அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதால் மகனை சந்திக்க அனும-திக்க வேண்டும் என முறையிட்டிருந்தார். இதை தொடர்ந்து நீதி-மன்ற உத்தரவுப்படி, குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின், மனைவியின் வீட்டுக்கு அடிக்கடி ராஜீவ் செல்ல தொடங்கினார்.
ஆனாலும் குடும்பம் நடத்த வரவில்லை. இந்நி-லையில் மகனுக்கு சூடு வைக்கப்பட்ட நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதையறிந்த ராஜீவ், சேலம் சைல்டு லைனில் புகாரளித்தார். அவர்கள் பரிந்துரைப்படி கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளிக்-கப்பட்டது. விசாரணையில் தந்தை, தாத்தா-பாட்டியை பார்க்க சிறுவன் அடம் பிடித்து அழுததால்,
தம்பியுடன் சேர்ந்து சவுமியா சூடு வைத்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து சேலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் முரளி கூறுகையில், ''குழந்தையை கொடுமைப்படுத்த பெற்றோருக்கு உரிமை கிடையாது. புகார் தொடர்பாக சட்ட ரீதியாக மேல் நட-வடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

