/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மனைவியை கொன்ற கணவன் உறவுப்பெண் வீட்டுக்கு தீ வைப்பு
/
மனைவியை கொன்ற கணவன் உறவுப்பெண் வீட்டுக்கு தீ வைப்பு
மனைவியை கொன்ற கணவன் உறவுப்பெண் வீட்டுக்கு தீ வைப்பு
மனைவியை கொன்ற கணவன் உறவுப்பெண் வீட்டுக்கு தீ வைப்பு
ADDED : பிப் 14, 2025 01:10 AM
சேலம்:சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே கோட்டகவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 65; கூலித்தொழிலாளி. இவரது மனைவி இந்திரா, 60.
நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு மது அருந்தி வந்த பாலகிருஷ்ணன், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து, கத்தியால் இந்திரா கழுத்தை அறுத்ததில் அவர் இறந்தார். தொடர்ந்து இந்திராவுக்கு உறுதுணையாக இருந்த, அதே பகுதி உறவுக்கார மாற்றுத்திறனாளி பெண் மாரியம்மாள், 67, வீட்டு ஜன்னலை திறந்த பாலகிருஷ்ணன், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில், மாரியம்மாள் மீது தீப்பற்றியதால், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறியதாவது:
இந்திராவுக்கும், பாலகிருஷ்ணனின் உறவினருக்கும் தகாத உறவு இருந்ததால், இந்திராவை கொலை செய்துள்ளார். மாரியம்மாள் வீட்டுக்கும் தீ வைத்துள்ளார். பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.