/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
என்னிடம் தில்லு இருக்கிறது: மார்தட்டும் அன்புமணி
/
என்னிடம் தில்லு இருக்கிறது: மார்தட்டும் அன்புமணி
ADDED : அக் 30, 2025 02:34 AM
ஓமலுார், ''என்னிடம் அரசை கொடுத்தால், 6 மாதங்களில் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றிவிடுவேன். அதற்கு என்னிடம் தில்லு இருக்கிறது,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
ஓமலுாரில் பா.ம.க., சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் அக்கட்சி தலைவர் அன்புமணி பேசியதாவது: இந்தியாவிலேயே அதிக போதை பொருள் விற்பனை மாநிலமாக மாற்றியது தி.மு.க., தான். போலீஸ் துறைக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. அத்துறை முதல்வர் வசம் உள்ளது. என்னிடம் அரசை கொடுத்தால், 6 மாதங்களில் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றிவிடுவேன். அதற்கு என்னிடம் தில்லு இருக்கிறது.
விவசாயம், விவசாய பொருட்கள் மீது தி.மு.க.,வுக்கு அக்கறை கிடையாது. 6 மணி நேரம் பேச, 6 கோடி ரூபாய் செலவு செய்து, சேலத்தில் இளைஞரணி மாநாடு நடத்திய தி.மு.க., டெல்டா மாவட்டத்தில் பேரிடரில் பாதிக்காதபடி, பிரமாண்ட நெல் சேமிப்பு கிடங்கு அமைக்காதது ஏன்?
தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் வெறும், 13 சதவீதம் மட்டுமே நிறைவேற்றியுள்ளது. பாதி அளவு கூட நிறைவேற்றாததால், தி.மு.க., பெயிலாகிவிட்டது. அதனால் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக், மாநில செயற்குழு உறுப்பினர் பாபு, மாவட்ட முன்னாள் கவுன்சிலர் அண்ணாமலை, சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

