/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பிரியாத வரம் வேண்டும்'; இறப்பிலும் இணைந்த தம்பதி
/
'பிரியாத வரம் வேண்டும்'; இறப்பிலும் இணைந்த தம்பதி
ADDED : டிச 09, 2024 07:22 AM
தாரமங்கலம்: 'பிரியாத வரம் வேண்டும்' என்பதற்கேற்ப, 90 வயதை கடந்த தம்பதியர், இறப்பிலும் இணைந்தனர்.
சேலம் மாவட்டம் தாமங்கலம், தண்டுமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன், 94. இவரது மனைவி வள்ளியம்மாள், 90. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த தம்பதியர், மகன்கள் பராமரிப்பில் தனி வீட்டில் வசித்தனர். சில நாட்களுக்கு முன் காலில் அடிபட்டு, நடக்க முடியாமல் இருந்த செல்லப்பனை, வள்ளியம்மாள் கவனித்து வந்தார்.
இந்நிலையில் வயது முதிர்வால், நேற்று காலை, 8:30 மணிக்கு, வீட்டில் வள்ளியம்மாள் இறந்தார். மனைவி இறந்த சோகத்தில் இருந்த செல்லப்பனும், மதியம், 1:00 மணிக்கு இறந்தார். இறப்பிலும் இணைந்த தம்பதிக்கு, உறவினர்கள் மற்றும் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.