/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தால் உதவுவேன்'
/
'கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தால் உதவுவேன்'
ADDED : டிச 21, 2024 01:23 AM
இடைப்பாடி, டிச. 21-
''இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டில் முழு ஆர்வமுடன் வந்தால், அவர்களுக்கு உதவி செய்வேன்,'' என, கிரிக்கெட் வீரர் நடராஜன்
தெரிவித்தார்.சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்த விளையாட்டு விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு, இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பரிசு வழங்கினார். தொடர்ந்து நடராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:
முதன்முதலில் தமிழக அணியில் விளையாடப்போகும்போது சற்று அச்சம் இருந்தது. பின் விளையாட, விளையாட, திறமையை மேம்படுத்தி உலகளவில் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதில் அச்சமின்றி விளையாடினேன். இதுபோன்று விளையாட்டு துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்காகவே, சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் அமைத்துள்ளேன்.
தற்போது வரும் வீரர்கள், உடனே, ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்க நினைக்கின்றனர். அது சாத்தியப்படாது. ஒருவர் விளையாட்டுத்துறையில் முன்னேற, கடினமாக உழைக்க வேண்டும். அப்போது தான் அந்த விளையாட்டின் தன்மை, திறமை தெரியும். தற்போது விளையாட்டில் பங்கேற்க அனைத்து வசதிகளையும் தமிழக அணி செய்துள்ளது. இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டில் முழு ஆர்வமுடன் வந்தால், அவர்களுக்கு உதவி
செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.

