/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து இ.கம்யூ.,போராட்டம்
/
ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து இ.கம்யூ.,போராட்டம்
ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து இ.கம்யூ.,போராட்டம்
ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து இ.கம்யூ.,போராட்டம்
ADDED : பிப் 11, 2025 07:29 AM
சேலம்: இ.கம்யூ., கட்சியின் சேலம் மாவட்ட செயலர் மோகன் தலை-மையில் நிர்வாகிகள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு விபரம்:
பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட, அமானி கொண்ட-லாம்பட்டி ஊராட்சியை, சேலம்
மாநகராட்சியுடன் இணைத்தால் சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி, புதிதாக வீடு கட்டுவதற்-கான
அனுமதி கட்டணம் உள்ளிட்டவை அனைத்தும் உயரும். குறிப்பாக ஊராட்சியில் 100 நாள் வேலை
திட்டத்தில் பணி-யாற்றும், 3,552 பேரின் வேலை பறிப்போகும். எனவே, மாநக-ராட்சியுடன்
இணைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, ஊராட்சி முன், கடந்தாண்டு செப்.,18ல், ஆர்ப்பாட்டம்
நடத்தினோம். தொடர்ந்து, அக்.,2ல், கிராமசபா கூட்டத்தில், ஊராட்சியை இணைக்கக்கூடாது என,
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனால் மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து, ஊராட்சியை
இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.