ADDED : ஜூன் 29, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: சங்ககிரி தாலுகா தேவண்ணகவுண்டனுாரில் உள்ள வேலம்மாவலசில் சூரிய மலையில் உள்ள கரட்டில், சிறு குகையில் சித்தேஸ்வரர் கோவில் உள்ளது. அதில் பழங்கால கொங்கண சித்தரின் வழிபாட்டு ஸ்தலமும் உள்ளது. அங்கு வேலம்மாவலசு, ரெட்டிக்காட்டை சேர்ந்த மாரப்பன், 67, என்பவர், பரம்பரை அல்லாத அறங்காவலராக உள்ளார்.
அவர் நேற்று, சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனு:
சூரியமலை கரட்டில் குகையில் உள்ள கோவிலில், பழங்கால, 14 சிலைகள் இருந்தன. அதில் ஒன்றான, ஒன்றேகால் அடி உயரம் கொண்ட கருடாழ்வார் கற்சிலையை, கடந்த, 27 காலை முதல் காணவில்லை.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையில் தடய அறிவியல் துறையினர், மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரிக்கின்றனர்.