/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மதகில் சேதம் இருந்தால் சீரமைக்க வேண்டும்'
/
'மதகில் சேதம் இருந்தால் சீரமைக்க வேண்டும்'
ADDED : ஆக 12, 2024 06:29 AM
சேலம்: வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனை கூட்டம், சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
அதற்கு தலைமை வகித்து கமிஷனர் ரஞ்ஜீத் சிங் பேசியதாவது:மழையால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காதபடி மின் மோட்டார்கள் மூலம் மழைநீரை உடனே அகற்ற வேண்டும். ஏரிகளில் உள்ள மதகுகளில் சேதம் உள்ளிட்டவை ஏதும் இருந்தால், உடனே சீரமைக்க வேண்டும். குமரகிரி ஏரி நீர் அளவை கண்காணிக்க வேண்டும். முழு கொள்ளவை எட்டும்படி இருந்தால் உபரிநீரை திறந்து வெள்ளப்பெருக்கு ஏற்படாதபடி கண்காணிக்க வேண்டும். தெரு, சாலைகளில் உள்ள மின்கம்பங்கள், மரங்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் மூட்டை, தளவாட சாமான்கள், தண்ணீர் இறைக்கும், உறிஞ்சும் மோட்டார்கள், சுகாதார மையங்களில் தேவையான மருந்து, மாத்திரைகள், டிராக்டர், பொக்லைன் போன்ற இயந்திரங்கள் தயாராக இருக்க வேண்டும். குடிநீர், மின் வினியோகம் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். துணை கமிஷனர்கள் பூங்கொடி, பாலசுப்ரமணியம், மாநகர நல அலுவலர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

