/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மருந்து ஆலையை அகற்றாவிடில் தேர்தலை புறக்கணிப்போம்'
/
'மருந்து ஆலையை அகற்றாவிடில் தேர்தலை புறக்கணிப்போம்'
'மருந்து ஆலையை அகற்றாவிடில் தேர்தலை புறக்கணிப்போம்'
'மருந்து ஆலையை அகற்றாவிடில் தேர்தலை புறக்கணிப்போம்'
ADDED : மார் 28, 2024 07:15 AM
ஆத்துார் : கெங்கவல்லி அருகே மண்மலை ஊராட்சி மொடக்குப்பட்டியில், 2021, அக்டோபரில் தனியார் பூச்சிக்கொல்லி மருந்து ஆலை கட்டப்பட்டது.
2022 ஜன., 3ல் சேலம் கலெக்டர் அலுவலகத்தில், மண்மலை விவசாயிகள், மக்கள், 'பூச்சிக்கொல்லி மருந்து ஆலைக்கு வழங்கப்பட்ட, மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என மனு அளித்தனர். தொடர்ந்து, 10 கிராம சபை கூட்டங்களில் ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். ஆனால் இதுவரை ஆலைக்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்யவில்லை என கூறி, நேற்று மண்மலை, மொடக்குப்பட்டியில், வீடு, தெரு, மரங்கள், சாலை உள்ளிட்ட இடங்களில், 'கறுப்பு' கொடி கட்டினர். மேலும், 'தேர்தல் புறக்கணிப்பு' என பதாகைகள் வைத்தனர். தவிர, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆலையை அகற்ற வேண்டும் என கோஷம் எழுப்பி, சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.