/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விதிமீறி டிரைவர் நியமனம்? கவுன்சிலர்கள் வாக்குவாதம்
/
விதிமீறி டிரைவர் நியமனம்? கவுன்சிலர்கள் வாக்குவாதம்
விதிமீறி டிரைவர் நியமனம்? கவுன்சிலர்கள் வாக்குவாதம்
விதிமீறி டிரைவர் நியமனம்? கவுன்சிலர்கள் வாக்குவாதம்
ADDED : ஜூலை 19, 2025 01:10 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், குப்பை அகற்ற டிராக்டர், மினி லாரி உள்ளன. 6 மாதங்களுக்கு முன் வாங்கப்பட்ட இந்த வாகனங்களுக்கு, டிரைவர் நியமனத்துக்கு, 'டெண்டர்' விடப்படவில்லை.
ஆனால் நேற்று முன்தினம் ஒப்பந்த அடிப்படையில், 'டெண்டர்' விடப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் நேற்று, தி.மு.க., கவுன்சிலர்கள் சுப்ரமணி, முருகேசன், கவிதா, பவுனாம்பாள், ராஜிஸ்ரீ உள்ளிட்டோர், டவுன் பஞ்சாயத்து அலுவலகம் சென்று, டிரைவர் பணி குறித்து தகவல் அளிக்காதது குறித்து கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து, தி.மு.க., கவுன்சிலர்கள் கூறுகையில், 'டிரைவர் பணி குறித்து தீர்மானம் வைக்காமல் தன்னிச்சையாக நியமித்துள்ளனர்' என்றனர்.
டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சிவக்குமார் கூறுகையில், 'தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவுன்சிலர்களிடம் தெரிவித்துள்ளோம்' என்றனர்.