/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2026ல் பா.ஜ., ஆட்சிக்கு வரும் துணைத் தலைவர் நம்பிக்கை
/
2026ல் பா.ஜ., ஆட்சிக்கு வரும் துணைத் தலைவர் நம்பிக்கை
2026ல் பா.ஜ., ஆட்சிக்கு வரும் துணைத் தலைவர் நம்பிக்கை
2026ல் பா.ஜ., ஆட்சிக்கு வரும் துணைத் தலைவர் நம்பிக்கை
ADDED : ஜூன் 19, 2024 01:58 AM
ஆத்துார், ''தமிழகத்தில் வரும், 2026ல், பா.ஜ., ஆட்சிக்கு வரும்,'' என, மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் பேசினார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உலிபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு, பா.ஜ., சார்பில், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்புக்கான வெற்றி விழா பொதுக்கூட்டம், மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடந்தது.
இதில், மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் பேசியதாவது:
முதல்வராக இருப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் இல்லை. எப்படியோ முதல்வராக ஸ்டாலின் வந்துவிட்டார். ஒரு மாநிலத்தில் மட்டும் ஆட்சி நடத்தும், தி.மு.க., கொள்ளையடித்த பணத்தை, தேர்தலில் மக்களிடம் கொடுத்து ஓட்டு வாங்குகிறது. ஓட்டுக்கு பணம் என்ற கலாசாரத்தை மக்களுக்கு, தி.மு.க., ஏற்படுத்தியுள்ளது. 15 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பா.ஜ.,வால் பணம் கொடுத்து ஓட்டு வாங்க முடியாதா? அதுபோன்று, பா.ஜ., ஒருபோதும் செய்யாது.
கொரோனா காலத்தில், ஜன்தன் வங்கி கணத்தில் மூன்று தவணைகளாக தலா, 500 ரூபாயை பிரதமர் மோடி வழங்கினார். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, கொரோனாவுக்கு இலவசமாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்கியது. ஊசி போடுவதற்கும் மத்திய அரசு தான் ஊக்கத்தொகை வழங்கியது. ஆனால் முதல்வர் ஸ்டாலின், தடுப்பூசி வழங்கியதுபோன்று, தனது படத்தை போட்டுக் கொண்டார். 2026ல், தமிழகத்தில், பா.ஜ., ஆட்சிக்கு வரும். மக்களுக்கு நேர்மையான ஆட்சியை வழங்குவோம். தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு பேசினார்.