/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓமலுாரில் இன்று நுாலக திறப்பு விழா
/
ஓமலுாரில் இன்று நுாலக திறப்பு விழா
ADDED : அக் 07, 2024 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுாரில் கலைஞர் நுாலகம் திறப்பு விழா இன்று நடக்கிறது.தி.மு.க.,வின் சேலம் மத்திய மாவட்டம் ஓமலுார் சட்டசபை தொகுதியில் ஓமலுார் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே, அக்கட்சி இளைஞரணி சார்பில் கலைஞர் நுாலகம் திறப்பு விழா இன்று நடக்கிறது.
ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமை வகிக்கிறார். மதியம், 3:00 மணிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நுாலகத்தை திறந்து வைக்கிறார்.
பள்ளி, கல்லுாரி மாணவியர், போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும்ப-டியான புத்தகங்கள் உள்பட பல்துறை சார்ந்த புத்தகங்கள் உள்-ளன. மேலும் திறப்பு விழா பணியை, நேற்று, தி.மு.க., நிர்வா-கிகள் மேற்கொண்டனர்.