/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மகளிர் கல்லுாரியில் பேரவை தொடக்கம்
/
மகளிர் கல்லுாரியில் பேரவை தொடக்கம்
ADDED : செப் 28, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகளிர் கல்லுாரியில்
பேரவை தொடக்கம்
சேலம், செப். 28-
சேலம், அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் பேரவை தொடக்க விழா நேற்று நடந்தது.
கலெக்டர் பிருந்தாதேவி குத்துவிளக்கு ஏற்றி, பேரவையை தொடங்கி வைத்து பேசுகையில்,'' கல்லுாரி பேரவைக்கு, தேர்தல் முறையில் மாணவியரை தேர்ந்தெடுப்பதால் பல நன்மைகள் உண்டு. பேரவையில் பங்கேற்பதன் மூலம் நமக்கான தலைமை பண்பு தானாகவே வந்துவிடும். எந்த பணியையும் சுமையாக கருதாமல் எளிதாக எடுத்து கொண்டு, அதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்,'' என்றார்.
முதல்வர் காந்திமதி, தாவரவியல்துறை தலைவர் விஜயகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.