/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அறநிலையத்துறை சேலம் மண்டல இணை அலுவலகம் திறப்பு
/
அறநிலையத்துறை சேலம் மண்டல இணை அலுவலகம் திறப்பு
ADDED : நவ 14, 2024 07:42 AM
சேலம்: இந்து சமய அறநிலைத்துறையின் சேலம் மண்டலம், சேலம், தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கியது. அதில் உள்ள கோவில்களை நிர்வகிக்கும் இணை ஆணையர் அலுவலகம், சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில், 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டது. இந்நிலையில் புதிதாக இணை ஆணையர் அலுவலகம் கட்ட, சேலம் எஸ்.பி., அலுவலக பின்புறம், அம்பலவாண சுவாமி கோவில் நிலத்தில், 3.65 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமானப் பணி தொடங்கி, இரு ஆண்டுகளாக நடந்து வந்தது.
அப்பணி முடிந்த நிலையில் நேற்று காலை, முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து அலுவலகத்தில், கலெக்டர் பிருந்தாதேவி குத்துவிளக்கேற்றி திறப்பு விழா செய்தார். சேலம்
எம்.பி., செல்வகணபதி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.