/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாரச்சந்தை கட்டடங்கள், அறிவுசார் மையம் திறப்பு
/
வாரச்சந்தை கட்டடங்கள், அறிவுசார் மையம் திறப்பு
ADDED : ஜன 06, 2024 12:47 PM
கொளத்துார்: கொளத்துார், காடையாம்பட்டி வாரச்சந்தை கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
கொளத்துார் டவுன் பஞ்சாயத்தில், 3.34 கோடி ரூபாய் மதிப்பில், 128 கடைகள் கட்டும் பணியை, 2021 டிச., 11ல், முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், அங்குள்ள, 1வது வார்டில் சந்தை கூடும் பகுதியில் கடைகள் கட்டும் பணி தொடங்கி நடந்தது. அந்த கடைகளை, முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று காலை, 10:30 மணிக்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கொளத்துாரில் டவுன் பஞ்., தலைவர் பாலசுப்ரமணியன், செயல் அலுவலர் ஞானசுந்தரம், தி.மு.க.,வின் ஒன்றிய செயலர் மிதுன்சக்கரவர்த்தி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
அதேபோல் காடையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து வாரச்சந்தை வளாகத்தில், கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தில், 79 லட்சம் ரூபாயில், மேற்கூரையுடன் கூடிய சந்தை கட்டப்பட்டது. அதையும், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து காடையாம்பட்டியில் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் பொற்கொடி தலைமையில் நடந்த விழாவில் தி.மு.க., ஒன்றிய செயலர் அறிவழகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். டவுன் பஞ்சாயத்து தலைவர் குமார், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
நுாலகம்
தாரமங்கலத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 1.40 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, அறிவுசார் மையம், நுாலகத்தையும், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து அறிவுசார் மையத்தில் நகராட்சி தலைவர் குணசேகரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். நுாலகத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புத்தகங்கள், இணைய சேவையுடன், 5 கணினி வசதி உள்ளது. ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன், நகராட்சி கமிஷனர் சேம் கிங்ஸ்டன், நகராட்சி துணைத்தலைவர் தனம், கவுன்சிலர்கள், கட்சியினர் பங்கேற்றனர்.