ADDED : மே 29, 2024 07:54 AM
ஆத்துார் : சேலம் மாவட்டம் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனுார், தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறை, வாழப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி, கத்தரி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறி சாகுபடி செய்யப்படுகின்றன.
இவற்றை, தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட், ஆத்துார், நரசிங்கபுரம், வாழப்பாடியில் உள்ள தனியார் காய்கறி மண்டி, வாரச்சந்தைகளில் விவசாயிகள் விற்கின்றனர். ஆனால் கோடை வெயில் தாக்கம், மழைக்கு பின் காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தலைவாசல் மார்க்கெட், ஆத்துார் காய்கறி மண்டியில் கடந்த வாரம் கிலோ தக்காளி, 30 ரூபாய்க்கு விற்றது. நேற்று, 27 கிலோ தக்காளி பெட்டி, 900 முதல், 1,000 ரூபாய்; 17 கிலோ பெட்டி, 600 முதல், 650 ரூபாய் வரை விலைபோனது. இதனால் கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டில் கிலோ, 50 ரூபாய். அதேபோல் கடந்த வாரம் கிலோ, 30க்கு விற்ற கத்தரிக்காய், நேற்று, 70 முதல், 80 ரூபாய்க்கு விற்பனையானது. 20க்கு விற்ற வெண்டைக்காய், 60; 10 முதல், 20க்கு விற்ற முள்ளங்கி, 30; 80 முதல், 100க்கு விற்ற அவரை, 150 ரூபாயாக விலை உயர்ந்தது.