/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெயிலால் கம்பு விற்பனை அதிகரிப்பு: பாரம்பரிய உணவுக்கு மாறும் மக்கள்

ADDED : மே 04, 2024 10:10 AM
பனமரத்துப்பட்டி: சேலத்தில் வெயில் கொளுத்துவதால் வெப்பத்தை தணிக்க, இளநீர், குளிர்பானம், பழச்சாறு, நுங்கு சாப்பிடுவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சாலையோரங்களில் கம்மங்கூழ் விற்பனை அமோகமாக நடக்கிறது.
வெப்பத்தை தணிக்கும் உணவு பழக்கத்துக்கு மக்கள் மாறி வருகின்றனர். வீட்டில் கம்பு சோறு, கேழ்வரகு களி செய்து அதனுடன் மோர், தயிர், வெங்காயம் சேர்த்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. பனமரத்துப்பட்டியை சேர்ந்த தானிய விற்பனையாளர் கோபிகண்ணன் கூறுகையில், ''வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, உடலுக்கு குளிர்ச்சி தரும் பாரம்பரிய தானிய உணவுகள் பக்கம், மக்கள் பார்வை திரும்பியுள்ளது.
மழை காலங்களில் கம்பு விற்பனை குறைவாக இருக்கும். வெயில் காலத்தில் சற்று அதிகரிக்கும். 15 நாட்களுக்கு மேலாக கம்பு, கேழ்வரகு விற்பனை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை கம்பு, ஓரிரு நாட்களில் விற்று தீர்ந்து விடுகிறது. கம்பு, கேழ்வரகு கூழ் செய்து சாப்பிடுவதால், உடல் சூடு தணிகிறது. ஒரு கிலோ கம்பு, கேழ்வரகு, 45 ரூபாய்க்கு விற்கிறோம். கம்பு தானியத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் சூழல் உள்ளது,'' என்றார்.