/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரவு நேரத்தில் மண், மணல் கடத்தல் அதிகரிப்பு
/
இரவு நேரத்தில் மண், மணல் கடத்தல் அதிகரிப்பு
ADDED : ஜூலை 17, 2025 01:54 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி பகுதியில், இரவு நேரத்தில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளதால், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆத்துார், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதி களில் கிராவல் மண், செம்மண் எடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், வலசக்கல்பட்டி நீரோடை பகுதிகளில் இரவு நேரங்களில் கடம்பூர், கூடமலை வழியாக டிப்பர் லாரி, டிராக்டர்களில் மணல் கடத்தி வருகின்றனர். கிராமப்புற சாலைகளில், இரவில் அதிவேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அனுமதியின்றி இரவில் மண் கடத்தும் நபர்கள் மீது, போலீசார், வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.