/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்ல சிப்பம் வரத்து அதிகரிப்பு
/
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்ல சிப்பம் வரத்து அதிகரிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்ல சிப்பம் வரத்து அதிகரிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்ல சிப்பம் வரத்து அதிகரிப்பு
ADDED : டிச 28, 2024 03:06 AM
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை மூலப்பிள்ளையார் கோவில் அருகே, மாவட்ட கரும்பு வெல்ல உற்பத்தி விவசாயிகள் சங்-கத்தில் வெல்ல ஏலம் நேற்று நடந்தது. அதில் பொங்கல் பண்டி-கையை முன்னிட்டு, வெல்லம் வரத்து அதிகரித்தது.
இதுகுறித்து சங்க செயலர் செல்லதுரை கூறியதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்ல தேவை அதிகரித்-துள்ளது. வழக்கமாக, 2,500 முதல், 3,000 சிப்பம் கொண்டு வரப்படும். தற்போது, 3,000 முதல், 4,000 சிப்பம் கொண்டு வரப்படுகிறது. மழையால் வெல்ல உற்பத்தியில் பாதிப்பு உள்-ளது. உற்பத்தி சீராகி, பொங்கல் பண்டிகை நெருங்கும்போது, 5,000 சிப்பம் வரை வர வாய்ப்புள்ளது.
சிப்பம்(30 கிலோ) உருண்டை வெல்லம், 1,350 முதல், 1,420 ரூபாய்; அச்சு வெல்லம், 1,450 முதல், 1,470 ரூபாய்க்கு விற்ப-னையாகிறது. 20 நாட்களுக்கு முன்பிருந்த விலையில் இருந்து, படிப்படியாக, 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வெல்லம் வழங்க வேண்டும். இதற்கு தமிழக அரசு, வெல்ல உற்-பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

