ADDED : மார் 08, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்;சேலம், கிச்சிப்பாளையம், கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்த மூதாட்டி, கடந்த, 4 இரவு, வீடு முன் பேத்திகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த குமரேசன், 55, என்பவர், குழந்தைகள் விளையாட எதிர்ப்பு தெரிவித்தார். அதில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், 'போதை'யில் இருந்த குமரேசன், ஆடைகளை அவிழ்த்து போட்டு ஆபாசமாக திட்டியுள்ளார். இதுகுறித்து மூதாட்டி நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, நேற்று குமரேசனை கைது செய்தனர்.

