sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அமெரிக்காவில் இந்திய தயாரிப்பு 'சிப்'கள்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

/

அமெரிக்காவில் இந்திய தயாரிப்பு 'சிப்'கள்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

அமெரிக்காவில் இந்திய தயாரிப்பு 'சிப்'கள்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

அமெரிக்காவில் இந்திய தயாரிப்பு 'சிப்'கள்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை


ADDED : செப் 23, 2024 03:29 AM

Google News

ADDED : செப் 23, 2024 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: ''மின்னணு சாதனங்கள் இயங்குவதற்கு தேவையான, 'செமிகண்-டக்டர்' எனப்படும், 'சிப்' தயாரிப்பில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இந்திய தயாரிப்பு, 'சிப்'களை அமெரிக்காவில் நீங்கள் காணும் நாள் வெகு துாரத்தில் இல்லை,'' என, பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்-றுள்ளார். இரண்டாவது நாளான நேற்று, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே கலந்துரையாடும் பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். நியூயார்க் நகரில் உள்ள நசாவு நினைவு அரங்கத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது. 'மோடியும் அமெரிக்காவும்' என்ற தலைப்பிலான இந்த நிகழ்ச்சியில் 24,000 பேர் பங்கேற்-றனர்.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது: உங்கள் அன்பு தான் என் அதிர்ஷ்டம். இந்தியா அமெரிக்கா இடையே நீங்கள் பாலமாக உள்ளீர்கள். உங்கள் திறன், திறமை, அர்ப்பணிப்பு ஆகியவை அளவிட முடியாதது. நீங்கள் ஏழு கடல்கள் தாண்டி இருந்தாலும், இந்த துாரம் உங்களை இந்தியாவில் இருந்து பிரித்துவிட முடி-யாது. பாரத மாதா நமக்கு கற்றுத் தந்தது மறக்க முடியாதது. நாம் எங்கு சென்றாலும் அனைவரையும் குடும்பமாக அரவ-ணைப்போம். வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்வது நம் ரத்-தத்தில் கலந்துள்ளது.

அரசியலில் நான் கால் பதிக்காத காலத்தில் இந்த மண்ணுக்கு வந்து சென்ற ஞாபகங்கள் என் நெஞ்சில் அலையடிக்கின்றன. நான் எந்த நாட்டுக்கு சென்றாலும், அங்கு வசிக்கும் இந்திய சமூ-கத்தினரை அந்நாட்டு தலைவர்கள் பாராட்டுகின்றனர்.

அதிபர் பைடன் டெலாவரில் உள்ள தன் வீட்டுக்கு என்னை வர-வேற்ற விதம் மறக்க முடியாதது. இது, 140 கோடி இந்தியர்க-ளுக்கும், இங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினருக்கும் கிடைத்த மரியாதை. 2024ம் ஆண்டு உலகிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

சில நாடுகள் மோதலை எதிர்கொண்டாலும், பல நாடுகள் ஜனநா-யகத்தைக் கொண்டாடுகின்றன. இந்த ஜனநாயகக் கொண்டாட்-டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக நிற்கின்றன.

நான் ஏதேதோ துறைகளில் பணியாற்ற ஆரம்பத்தில் திட்டமிட்டி-ருந்தேன். ஆனால் விதி என்னை அரசியல் பக்கம் இழுத்து வந்-தது. முதல்வராவேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆனால், பிரதமர் பதவி வரை வந்துள்ளேன்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் பிறந்தவன் நான். என்னால் நாட்-டுக்காக உயிர் தியாகம் செய்ய இயலவில்லை. அதனால் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணிக்க முடிவு செய்தேன். இந்தியா இப்போது வாய்ப்புகளின் பூமி. அது இனி வாய்ப்புக-ளுக்காக காத்திருக்காது, அது வாய்ப்புகளை உருவாக்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கி தரும் களமாக இந்தியா மாறியுள்ளது.

ஆற்றல் மற்றும் கனவுகளால் பாரதம் நிரம்பி வழிகிறது. ஒவ்-வொரு நாளும் புதிய சாதனைகளைப் பார்க்கிறோம். இன்று, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளும் தங்கப் பதக்கங்களை வென்-றுள்ளன.பெண்கள் நலனில் மட்டுமின்றி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அரசு கட்டிய பல வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், 10 கோடி பெண்கள் குறுந்தொழில் முனைவோர் திட்டத்தில் இணைந்துள்ளனர்.

விவசாயத்தில், நாங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து-கிறோம், விவசாயத்திற்கு ட்ரோன்களைப் பயன்படுத்துகிறோம். கிராமப்புற பெண்கள் இந்த முயற்சியில் முன்னணியில் உள்-ளனர்.

ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஆளில்லா விமான பைலட் ஆக பயிற்சி அளித்து வருகிறோம். இந்த தொழில்நுட்ப புரட்சி கிரா-மங்களைச் சேர்ந்த பெண்களால் இயக்கப்படுகிறது.

இந்தியாவின், 5ஜி தொழில்நுட்பம் அமெரிக்காவை விட பெரி-யது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இது சாத்தியமாகி உள்ளது. அடுத்தகட்டமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் 6ஜி தொழில்-நுட்பம் நோக்கி நகர்ந்துள்ளோம்.

அனைத்து மின்னணு சாதனங்கள் இயங்குவதற்கு தேவையான, 'செமிகண்டக்டர்' எனப்படும், 'சிப்' தயாரிப்பில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இந்திய தயாரிப்பு, 'சிப்'களை அமெ-ரிக்காவில் நீங்கள் காணும் நாள் வெகு துாரத்தில் இல்லை. அந்த சிறிய, 'சிப்'கள், வளர்ந்த இந்தியாவை புதிய உயரத்துக்கு உயர்த்தும்.இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, கிராமி விருது பெற்ற சந்திரிகா டாண்டன், ஸ்டார் வாய்ஸ் ஆப் இந்தியா வெற்றியாளர் ஐஸ்வர்யா மஜும் தார், பிர-பல பாடகர்கள் ரெக்ஸ் டிசவுசா, ஆதித்யா கதாவி உள்ளிட்டோர் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். அரங்கத்திற்கு வெளியே 100க்கும் மேற்பட்டோர் இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை நடத்தினர்.






      Dinamalar
      Follow us