/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நெகிழி இல்லாத பள்ளி வளாகங்கள் பரிசு பெற விண்ணப்பிக்க அழைப்பு
/
நெகிழி இல்லாத பள்ளி வளாகங்கள் பரிசு பெற விண்ணப்பிக்க அழைப்பு
நெகிழி இல்லாத பள்ளி வளாகங்கள் பரிசு பெற விண்ணப்பிக்க அழைப்பு
நெகிழி இல்லாத பள்ளி வளாகங்கள் பரிசு பெற விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : பிப் 22, 2024 07:19 AM
சேலம் : ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி மஞ்சப்பை, பாக்கு மட்டை, காகிதங்களால் ஆன பை, உறை என சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்த, நெகிழி இல்லாமல், வளாகங்களை மாற்றும் பள்ளி, கல்லுாரி, வணிக நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, 'மஞ்சப்பை' விருது வழங்கப்பட உள்ளன.
சிறந்து விளங்கும் தலா, 3 பள்ளி, கல்லுாரி, வணிக நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, முதல் மூன்று இடங்கள் முறையே, 10 லட்சம், 5 லட்சம், 3 லட்சம் ரூபாய் பரிசு பெறலாம். அதற்கான விண்ணப்ப படிவத்தை சேலம் கலெக்டரின் இணையதளமான, https://salem.nic.in/notice/manjappai-awards/-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கும் ஆவணத்தில் தனி நபர், துறை தலைவர் கையொப்பமிட வேண்டும்.
விண்ணப்பத்தின் இரு பிரதிகள், மென்நகல்களை(சிடி., பென்டிரைவ்), 'மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சிவா டவர்ஸ், 2ம் தளம், மெய்யனுார் பிரதான சாலை, சேலம்' என்ற முகவரிக்கு, மே, 1க்குள் அனுப்ப, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.