ADDED : ஆக 08, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, வாழப்பாடி, முத்தம்பட்டி, முந்திரி தோப்பு கரட்டில் மர்ம நபர்கள் மண் கடத்துவதாக, அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து, நேற்று சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனால், பி.டி.ஓ., முத்தழகு அப்பகுதியில் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து தாசில்தார் ஜெயந்தி கூறுகையில், ''சுரங்கத்துறை அதிகாரிகள் அனுமதி பெற்று பட்டா இடத்தில் மண் எடுக்கப்படுகிறது. இதில் சட்டவிரோதம் ஏதும் இல்லை. சிலர் தெரியாமல் புகார் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.