/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் முதல்நிலை சரிபார்ப்பு தொடக்கம்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் முதல்நிலை சரிபார்ப்பு தொடக்கம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் முதல்நிலை சரிபார்ப்பு தொடக்கம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் முதல்நிலை சரிபார்ப்பு தொடக்கம்
ADDED : டிச 12, 2025 08:35 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்-னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்த்தல் பணி, மாவட்ட தேர்தல் அலுவலரான, கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:
தேர்தல் கமிஷன் அறிவிப்பின்படி, 2026 சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தப்படும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் - 8,412, கட்-டுப்பாட்டு கருவிகள் - 4,888, ஓட்டுப்போட்டதை சரிபார்க்கும் கருவி - 5,336 ஆகிய இயந்திரங்களின் முதல்நிலை சோதனை, பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்களால், அங்கீகரிக்கப்-பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடந்தது.
இப்பணி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு இ-யந்திர பாதுகாப்பு அறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதை ஒட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் போடப்பட்டுள்ளது. இப்ப-ணியை தினமும், கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.