/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.10 கோடி பொருட்களை எடுத்துச்சென்ற புகாரில் தந்தை - மகன் மீது வழக்கு
/
ரூ.10 கோடி பொருட்களை எடுத்துச்சென்ற புகாரில் தந்தை - மகன் மீது வழக்கு
ரூ.10 கோடி பொருட்களை எடுத்துச்சென்ற புகாரில் தந்தை - மகன் மீது வழக்கு
ரூ.10 கோடி பொருட்களை எடுத்துச்சென்ற புகாரில் தந்தை - மகன் மீது வழக்கு
ADDED : டிச 12, 2025 08:35 AM
சேலம்: இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள், நகை, பணம் என, 10 கோடி ரூபாய் மதிப்பில் பொருட்களை எடுத்துச்சென்றதாக, முதி-யவர் அளித்த புகாரில், அவரது அண்ணன், மகன் மீது வழக்குப்ப-திந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம், கோரிமேட்டை சேர்ந்த சர்வேஸ்வரன், 50, கிச்சிப்பா-ளையம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் அளித்த புகார் மனு:
தந்தை வெங்கடாஜலம், சேலம், களரம்பட்டியில், லாரி, பஸ்-களை பழுதுபார்க்கும் லேத் பட்டறையில் பெட்ரோல் செல்வதற்-கான பழுதுபார்ப்பு பணி மேற்கொள்ளும், 'வெங்கடேஷ்வரா ஒர்க்கர்ஸ்' எனும் பட்டறை நடத்திய நிலையில், சில ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். நான் உள்பட உடன் பிறந்தவர்கள், 6 பேர். அனைவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், நீதி-மன்றத்தில் வழக்கு நடக்கிறது.
தந்தை தொழிலுக்கு வங்கியில், 7.50 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அதன்மூலம் நிறுவனத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி, அத்தொழிலை நடத்தி வந்தோம். சரிவர கடன் செலுத்தாததால், வங்கி நிறுவன அதிகாரிகள், பட்டறை பொருட்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
இந்நிலையில் அண்ணன் யோகானந்த் பிரபு, அவரது மகன் விஷ்ணு, பட்டறையில் உள்ள இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள், தந்தை வீட்டில் இருந்த நகை, பணம் என, 10 கோடி ரூபாய் மதிப்பில் பொருட்களை எடுத்துச்சென்றனர். அதனால் மாவட்ட நிர்வாகம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதையடுத்து யோகானந்த் பிரபு, விஷ்ணு மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

