/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அறுந்து தொங்கிய 'ஸ்டே' கம்பி பட்டு மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலி
/
அறுந்து தொங்கிய 'ஸ்டே' கம்பி பட்டு மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலி
அறுந்து தொங்கிய 'ஸ்டே' கம்பி பட்டு மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலி
அறுந்து தொங்கிய 'ஸ்டே' கம்பி பட்டு மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலி
ADDED : டிச 12, 2025 08:34 AM
ஓமலுார்: அறுந்து தொங்கிக்கொண்டிருந்த, 'ஸ்டே' கம்பி, நடந்து சென்ற விவசாயி உடல் மீது பட்டதில், அவர் மயங்கி விழுந்து இறந்தார். இதை பார்த்து அலறியடித்து சென்று மகனும், அதே கம்பி பட்டு உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டையை சேர்ந்தவர் முத்து, 67. இவரது மனைவி மாராயி, 63. இவர்களது மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன் கிருஷ்ணமூர்த்தி, 38, பி.இ., முடித்துவிட்டு தந்தையுடன் விவசாயம் செய்து வந்தார். நேற்று மதியம், 1:30 மணிக்கு, முத்து, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், வீடு பின்புறம் உள்ள தோட்டத்துக்கு ஆடுகளை ஓட்-டிச்சென்றனர்.
தோட்டம் அருகே கிணற்றோரம், மின்கம்பம் வழியே கொண்டு செல்லப்பட்ட கேபிள் 'டிவி' ஒயர், 'ஸ்டே' கம்பி அறுந்து தொங்-கிக்கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் நடந்து சென்ற முத்து தோள்பட்டை மீது, அந்த கம்பி பட்டுவிட, மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்து பலியானார். இதை பார்த்து கிருஷ்ணமூர்த்தி வேகமாக ஓடிச்சென்று, தந்தையை துாக்க முயன்றார். அப்போது அதே கம்பி, அவரது முதுகு பகுதியில் பட்டுவிட, அவரும் சம்-பவ இடத்தில் பலியானார்.
தோட்டத்துக்கு சென்றவர்களை காணவில்லை என, மாராயி தேடி வந்தபோது, இருவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து மக்கள் தகவல்படி, தீவட்டிப்பட்டி போலீசார் மூலம், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின் போலீசார் இருவரது உடல்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

