/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சீல்' வைத்த பூட்டை உடைத்து பூஜை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
சீல்' வைத்த பூட்டை உடைத்து பூஜை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சீல்' வைத்த பூட்டை உடைத்து பூஜை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சீல்' வைத்த பூட்டை உடைத்து பூஜை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 09, 2025 01:12 AM
சேலம், ஆத்துார், அப்பம சமுத்திரம் வடக்குகாட்டை சேர்ந்த மக்கள், சேலம், எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:
எங்கள் பகுதியில் உள்ள செல்வத்து மாரியம்மன் கோவிலில், கடந்த மாதம் இருதரப்பினர் பிரச்னையால், தாசில்தார், கோவிலை மூடி முத்திரையிட்டு சீல் வைத்தார். ஆனால் நேற்று முன்தினம் இரவு, சிலர் கோவிலில் புகுந்து, சீல் வைக்கப்பட்ட பூட்டை உ
டைத்து பூஜை செய்து கிடா வெட்டி விருந்து வைத்தனர். பொருட்களையும் திருடிச்சென்றனர். இதை அறிந்து வருவாய்த்துறையினர் கேட்டதற்கு, அவர்களை பணிபுரிய விடாமல் தடுத்து மிரட்டி அனுப்பிவிட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, கோவிலுக்கு சென்றவர்கள் மீது உரிய நடவடிகை எடுக்க வேண்டும்.