/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆட்சிக்குழு உறுப்பினர் நியமிக்க வலியுறுத்தல்
/
ஆட்சிக்குழு உறுப்பினர் நியமிக்க வலியுறுத்தல்
ADDED : அக் 11, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன் அறிக்கை:
பெரியார் பல்கலையில் ஓராண்டாக ஆட்சிக்குழு ஒப்புதல் பெற்றும், வழங்கப்படாத ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பல்கலையில் உள்ள பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பதவி உயர்வு பெற்றதால் அந்த இடங்கள் காலியாக உள்ளன. வரும், 16ல் பட்டமளிப்பு விழாவுக்கு முன், புது ஆட்சிக்குழு உறுப்பினர்களை நியமித்து பட்டமளிப்பு விழா அணிவகுப்பில் பங்கேற்க செய்ய வேண்டும். இதுகுறித்து முதல்வர், கவர்னர், உயர்கல்வித்துறை அமைச்சர், அரசு செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.