/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலாளரை வெப்பத்தில் இருந்து காக்க அறிவுறுத்தல்
/
தொழிலாளரை வெப்பத்தில் இருந்து காக்க அறிவுறுத்தல்
ADDED : மே 08, 2024 04:46 AM
சேலம் : சேலத்தில் தொழிலாளர் உதவி கமிஷனர் கிருஷ்ணவேணி தலைமையில் அனைத்து வணிக சங்கங்களுடன் கூட்டம் நேற்று நடந்தது. அதில் கடைகள், வர்த்தகம், உணவு உள்ளிட்ட நிறுவனங்களில் வெப்ப அலையை எதிர்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
பணியாளர் எண்ணிக்கைக்கு ஏற்ப சுகாதார குடிநீர் வழங்குதல்; கழிப்பிடம், குளியல் அறை வசதி செய்து கொடுத்தல்; பணிபுரிய ஏதுவாக காற்றோட்ட சூழல், போதிய இருக்கை வசதி; வெளிச்சம், சுழற்சி முறையில் சட்டப்பூர்வ வேலை நேரம், ஓய்வு அளித்தல்; பணியின் போது எலுமிச்சை சாறு, நீர், மோர், பால் எலக்ட்ரோலைட்டுகள், ஓ.ஆர்.எஸ்., பவுடர் வழங்குதல்; மதியம், 12:00 முதல், 3:00 மணி வரை அவசிய பணிகளை தவிர்த்து இதர வேலை வாங்குவதை தவிர்த்தல்; வேலை செய்வோருக்கு ஓய்வு, இடைவேளை வழங்குதல்; வெப்ப அலையால் பாதிக்கப்பட்டால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல்; தொழிலாளர்களை பாதுகாப்பது நிர்வாக கடமை என்பதால் அதை கண்காணிக்க ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.இதில் வணிக, உணவு நிறுவனங்கள், இதர நிறுவன உரிமையாளர்கள், மேலாளர்கள், சங்க தலைவர், செயலர், பிரதிநிதிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

