/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய அறிவுறுத்தல்
/
கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய அறிவுறுத்தல்
கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய அறிவுறுத்தல்
கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 15, 2024 01:17 AM
பனமரத்துப்பட்டி: கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய மருத்துவர்கள் அறிவு-றுத்தி உள்ளனர்.பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 22,000க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் உள்ளன.
இதுதவிர ஆடுகள், எருமை, காளை மாடு-களும் வளர்க்கப்படுகின்றன.சுகாதார குறைபாடு, ஏராளமான ஆடுகளை ஒரே இடத்த்தில் வைத்து வளர்த்தல், தீவன பற்றாக்குறையால் குடற்புழு நோய் தாக்குகிறது. இதனால் கால்நடைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து குறைதல், பால் உற்பத்தி குறைதல், கால்நடைகள் மெலிந்து ரத்த சோகை ஏற்பட்டு பொருளாதார பாதிப்பு ஏற்படும்.இதுகுறித்து பனமரத்துப்பட்டி கால்நடை மருத்துவர்கள் கூறியதா-வது: பண்ணை மற்றும் மேய்ச்சல் நிலம் சுகாதார முறையில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், 3 மாத இடைவெளியில், 4 முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். குறிப்பாக பருவ-மழை தொடங்கும் முன், மழை சமயத்தில், பருவமழைக்கு பின் இருமுறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். அரசு கால்நடை மருந்தகத்தில் குடற்புழு நீக்க மருந்துகள் உள்-ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

