ADDED : ஜன 10, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: மத்திய அரசுக்கு சொந்தமான பொது காப்பீடு துறையை சேர்ந்த ஓரியண்டல் இன்சூரன்ஸ் நேஷனல், யுனெடட் இந்தியா, நியூ இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரிகள், ஊழியர்கள், அகில இந்திய அளவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் அரசு மருத்துவமனை அருகே உள்ள ஓரியண்டல் இன்சூரன்ஸ் அலுவலகம் முன், தென்மண்டல பொதுச்செயலர் சரசுராம் ரவி தலைமையில் இன்சூரன்ஸ் ஊழியர்கள், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், 3 ஆண்டாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை வழங்குதல்; 25,000 காலி பணியிடங்களை நிரப்புதல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.